கோட்டாவின் வருகையை எதிர்க்கும் சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டபாய ராஜபக்சவை கொண்டு வர முயற்சித்தால் தாம் அரசாங்கத்தில் நிலைத்திருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகலவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை சுத்தம் செய்வதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கேட்டபாய ராஜபக்சவை அரசாங்கத்திற்குள் கொண்டு வர முயற்சித்தாம் தாம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க போவதில்லையென குறிப்பிட்டுள்ளார்.








