வரி விலக்களிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கான வர்த்தமானி அறிக்கை இன்று
வற் வரி விலக்களிக்கப்பட்ட 15 அத்தியாவசியப் பொருட்களுக்கான நிவாரண விலைகள் இன்று (14) அறிவிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதன்படி நிர்ணய விலைகளாக;
சீனி 1Kg – ரூ.95
கோதுமை மா 1Kg – ரூ.87
சிவப்பு பருப்பு 1Kg – ரூ.169
நெத்தலி (தாய்லாந்து) – ரூ.495
நெத்தலி (டுபாய்) – ரூ.410
உள்நாட்டு நெத்தலி – ரூ.260
பயறு – ரூ.220
தோலுடனான கோழி இறைச்சி – ரூ.410
தோலின்றிய கோழி இறைச்சி – ரூ.495
உள்நாட்டு கிழங்கு – ரூ.120
பெரிய வெங்காயம் – ரூ. 70
செத்தல் மிளகாய் – ரூ.395.
மேற்குறித்த விலைப்பட்டியலில் இன்னும் நான்கு பொருட்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்க.








