Breaking News

யாழில் தேர் இழுக்கும் இராணுவம்!



யாழ். அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா நேற்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கில் தற்போதும் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றைய தேர் திருவிழாவின் போது ஆலயத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வருகை தந்திருந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இராணுவத்தினர் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து தேரும் இழுத்துள்ளனர்.

தமது மேலாடைகளை கலைந்து விட்டு, தமது காலணிகளை கழட்டி விட்டு பக்தர்களுடன் இணைந்து இராணுவத்தினர் தேரினை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.