Breaking News

கிளிநொச்சி நகரிலிருந்து இராணுவமுகாம் – நினைவுத்தூபிகள் அகற்றப்பட வேண்டும்!




கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, அங்குள்ள இராணுவ நினைவுத்தூபிகளும் அகற்றப்ப டவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற, கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராய்நதனர்.

இதன்போது, கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்திக்கு இராணுவ வெளியேற்றம் அவசியமானது என்றும், நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தின் கையில் உள்ளதாகவும், வளம் பொருந்திய, பொருளாதாரம் மிக்க இடங்கள், அழகான பகுதிகள் இராணுவத்திடம் உள்ளதாகவும் நகரத்தின் அபிவிருத்திக்கு இது பாரிய இடைஞ்சலாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.