Breaking News

பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் நாளை முதல் மீண்டும் வேலைநிறுத்தம்!



தமது கோரிக்கைகள் தொடர்பில் ஏற்றுக்கொ ள்ளத்தக்க எந்தவொரு தீர்வும் கிடைக்கப் பெறாத மையினால் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நாளை (27) முதல் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினால் எந்தவொரு தீர்வும் பெறப்படவில்லையென அச்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.