வடக்கு மாகாணசபை இனி மாங்குளத்திலா?
வடக்கு மாகாணசபைக்கான கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சரையும் இன்று காலை 9.30 மணியளவில் கைதடியிலமைந்துள்ள வடக்குமாகாண சபைக் கட்டட அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.
குறித்த இச்சந்திப்பின்போதே வடக்கு மாகாண சபை கட்டடத்தை வவுனியா – மாங்குளத்திற்கிடையில் அமைப்பது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்கள அரச உத்தியோகஸ்தர்கள், விவசாய அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.








