பொறுத்திருந்து பாருங்கள், நாங்கள் விரைவில் மாற்றுவோம்- மஹிந்த சவால்
இந்த அரசாங்கம் நீண்ட காலத்துக்கு இருக்க மாட்டாது. பொறுத்திருந்து பாருங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய மகஸின் சிறைச்சாலையிலுள்ள நாமல் ராஜபக்ஷவின் சுகதுக்கங்களை விசாரித்து விட்டுச் செல்கையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாம் மக்கள் போராட்டம் நடாத்துகின்றோம். நடைபவனி நடாத்தவுள்ளோம். ஆர். பிரேமதாச காலத்திலும் இதனைத் தான் நாம் செய்தோம். எனவே, பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் மேலும் கூறினார்








