Breaking News

நாடாளுமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உறுப்பினர்!

அனைவரையும் விட பிரதமருக்கு என்மீது தனி விருப்பம் உள்ளது. இது தொடர்பில் யாரும் பொறாமைப்பட வேண்டாம் என்று கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


பாராளுமன்றத்தின் நேற்றைய மூன்றாம் நாள் அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் குறித்து எனக்கு தகவல்கள் தெரிவிக்க முடியும். அந்த உரிமை எனக்கு உள்ளது எனவும் கீதா குமாரசிங்க கூறியிருந்தார்.

இதன் போது பாராளுமன்றத்தில் இரட்டை அர்த்த வார்த்தைகள் பிரயோகிக்க வேண்டாம், பாடசாலை மாணவர்களும் இங்கு வருகைத்தந்துள்ளனர் என்ற கண்டனங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

தொடர்ந்தும் கீதா குமாரசிங்க உரையாற்றுகையில், நாட்டில் விலைவாசி அதிகரிப்பாலும் வாழ்வாதார செலவீனத்தினாலும் பெண்களே அதிக துன்பத்தினை சந்தித்துள்ளனர், இவ்வாறான நிலை கடந்த காலங்களில் எப்போதும் காணப்படவில்லை என குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் பெண்கள் வீதியில் இறங்கிப் போராடினால் 5 வருடங்களில் அல்ல 2 வருட முடிவிலேயே தற்போதைய அரசு வீடு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் கீதா குமாரசிங்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.