Breaking News

வடக்கு முதல்வரை சந்தித்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்



யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் (Stéphane Dion) இன்று (வெள்ளிக்கிழமை), வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரைனைச் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பானது யாழ்பாணம் கைதடியில் அமைந்துள்ள, வடமாகாண முதல்வர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடமாகாண முதல்வரின் செயலாளர் உள்ளிட்ட, வடமாகாணத்தின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அதனைப் பெற்றுக் கொள்வதற்கான நடமுறைச் சாத்தியங்கள், மற்றும் பாதுகாப்பு, இராணுவ பிரசன்னம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.