லசந்த கொலை திடுக்கிடும் ஆதாரங்கள் அம்பலம்
கையடக்க தொலைபேசியிலிருந்து பெறப்பட்ட புதிய ஆதாரங்கள் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் ஆகியோர் லசந்த விக்கரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட் நிலையில், பாதுகாப்பு அதிகாரியின் கையடக்க தொலைபேசியை ஆய்வுக்குட்படுத்தியபோது பல திடுக்கிடும் ஆதராங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
லசந்த விக்கரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகளை ஆய்வுக்குட்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நான்கு கையடக்கதொலைபேசியில் உள்ளடக்கப்பட்டிருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
தொலைபேசிகளிலுள்ள மூன்று மாதத்திற்குட்டபட்ட விபரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென கையடக்க தொலைபேசி நிறுவனம் குற்றப்பலானாய்வு பிரிவினருக்கு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட சாஜன் மேஜரை விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பெற்றுக்கொள்ளபட்ட தகவல்களின் அடிப்படையில் லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு தரப்பினரை குற்றப்புலனாய்வு தரப்பினர் துரிதாமாக நெருங்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரியான சாஜன் மேஜர் ஒருவர் குற்றப்புலனாய்வு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்திவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் கடந்த 15 ஆம் திகதி உதாலகம என்ற சாஜன் மேஜர் தர இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைதுசெய்திருந்தனர்.








