Breaking News

இலங்கிலாந்தின் குட்டி இளவரசரின் பிறந்தநாள் படத்தால் சிக்கல்

இங்கிலாந்து அரச குடும்ப தம்பதிகள் வில்லியம் - கேத்தின் மகன் ஜார்ஜ் பிறந்த நாளில் நாய்க்கு ஐஸ் கிரீம் ஊட்டியதற்கு விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் ஆகியோரின் மகன் ஜார்க்கு நேற்று மூன்றாவது பிறந்த நாள். குட்டி இளவரசனின் பிறந்த நாளை வில்லியம் - கேத் தம்பதிகள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். 

பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது எடுத்த படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுவருகிறார்கள். ஆனால், ராயல் தம்பதிகள் வெளியிட்ட படம் ஒன்று அவர்களுக்கே சிக்கலாகிவிட்டது. குறிப்பிட்ட அந்த புகைப்படத்தில் குட்டி இளவரசர், நாய் ஒன்றுக்கு சாக்லேட் ஐஸ் கிரீம் ஊட்டி விடுகிறார். 

பால் பொருட்களால் செய்யப்பட்ட அந்த சாக்லேட் ஐஸ் கிரீம் விலங்குகளுக்கு அலர்ஜி என்பதால், விலங்கின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

குட்டி இளவரசரை சாக்லேட் ஐஸ் கிரீம் ஊட்ட அனுமதித்த ராயல் தம்பதிகள் வில்லியம்-கேத்தை விலங்கின ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குட்டி இளவரசர், நாயை கொல்ல முயற்சிப்பதாக சிலர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.