மாயமான இந்திய விமானம் பற்றி எந்த தகவலும் இல்லை
இந்தியாவின் சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் நேற்று காலை புறப்பட்ட விமானப்படை விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த மாயமானது.
குறித்த விமானத்தை தேடும் பணியில் விமானப்படையினரும், கப்பல் படையினரும் ஈடுபட்டுள்ளனதாகவும், இதுவரை விமானம் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.