Breaking News

வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுப்போம்!

உண்மையான அமைதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுக்கும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.


“கனேடிய தமிழர்களுடன் உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகம் நினைவுகூரும், 1983 கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வுகளில் கனடாவும் இணைந்து கொள்கிறது.

தமிழர்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், சிறிலங்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போதும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அதேவேளை, தமது குடும்ப உறவுகளையும், நண்பர்களையும் இழந்தவர்களுக்கு எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உண்மையான அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் நீதியைக் கொண்டுவர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கத்தை கனடா தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும் கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.