இறுதி யுத்தத்தில் என்ன? நடந்தது என்று சிங்கள மக்களுக்கும் தெரிய வேண்டும்!
இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் என்பன, வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் உட்பட, தெற்கு சிங்கள மக்களுக்கும் தெரியபடுத்தபட வேண்டும் என, சம உரிமை இயக்கதின் தலைவர் ரவீந்திர முதலிகே குறிப்பிட்டார்.
அதேபோல், இறுதி கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதற்காக, உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ராஜகிரியாவில் அமைந்துள்ள சம உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.








