ஏழு மாவட்டங்களில் சிக்கல்!
18 மாவட்டங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணய சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணயம் தொடர்பிலான மீளாய்வு குழு தெரிவித்துள்ளது.
மாத்தளை, நுவரெலிய மற்றும் வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களின் எல்லை நிர்ணய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் வகையில், ஐந்து பேர் கொண்ட குழுவொன்றினை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் குறித்த குழு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தமது அறிக்கையை அமைச்சரிடம் கையளிக்க வேண்டுமென அறிவுவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த ஏழு மாவட்டங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான சிக்கல்களுக்கு இதுவரை தீர்வுகாணப்படாத நிலையில், இறுதி அறிக்கையை தயாரிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எல்லை நிர்ணயம் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினாலேயே ஒத்திவைக்கபட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த வருடம் சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








