தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென தேசிய கலந்துரை யாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதம் உட்பட அனைத்து பயங்கரவாதமும் ஒழிக்கப்பட்டு நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு காக்கைத்தீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாட்டில் நல்லிணக்கம் அவசியம் எனவும், நாட்டில் வாழும் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், நாம் முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
அந்தக் காலத்தில் நாம் சண்டை பிடித்தோம், வார்த்தைகளால் மோதிக்கொண்டோம். வெட்டிக்கொண்டோம். துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டோம். குண்டுகளால் தாக்கிக்கொண்டோம். ஆனால்அந்த நிலமை தற்போது இல்லை.
அன்று அரச பயங்கரவாதம் இருந்தது. அரச சார்பற்ற பங்கரவாதம் இருந்தது. விடுதலைப் புலி பயங்கரவாதம் இருந்தது. அவை அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உண்மையான சகவாழ்வையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.








