பிரதமர் மீண்டும் ஊடகங்களை அச்சுறுத்துகிறார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி என்றும் ஜனநாயகம் என்றும் கூறிக்கொண்டு, ஊடகங்களையும் அதேபோன்று எதிரணியினரையும் பிரதமர் அச்சுறுத்துவதாகவும், நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதாக தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை, பிரதமர் காப்பாற்ற தவறிவிட்டதாவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக அச்சு ஊடகமொன்றின் ஊடகவியலாளர் செயற்பட்டு வருவதாகவும், மஹிந்தவின் மூலம் நன்மையடைய முயற்சித்தவர்களின் பெயர்களை எதிர்வரும் காலத்தில் வெளிப்படுத்தவேண்டி ஏற்படும் என்றும், நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








