மீண்டும் சர்வாதிகார ஆட்சியைக் கைப்பற்றலாம் என மஹிந்த அணியினர் கனவு: சம்பிக்க
பாத யாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அமைத்து கூச்சல் போடுவதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் சர்வதிகார ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியினரும் கனவு காண்கின்றனர் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல் தஞ்சம் கோரி நிற்கும் இவர்கள் அனைவரும் முன்னைய அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகளை செய்தவர்கள். இவர்கள் செய்த அனைத்து குற்றங்களுக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும் எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.
பொது எதிரணியின் பாதை யாத்திரை அரசாங்கத்திற்கு சவாலாக அமைந்துள்ளதாக விமர்சித்து வரும் நிலையில், அது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி தெளிவு படுத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.








