நல்லாட்சி அரசும் தமிழ் மக்களை விட்டுவைக்கவில்லை! (காணொளி இணைப்பு)
ஸ்ரீலங்காவின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்கள மீதான இனப்படுகொலையை தொடர்ந்தும் முன்னெடுத்த வருவதாக குற்றம்சாட்டும் மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் அதனை அரசியல் மறுசீரமைப்பின் ஊடாக இவற்றை சட்டமாக்கவும் முயல்வதாகவும் தெரிவித்தார்.
கறுப்பு ஜுலை என அழைக்கப்படும் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொடூர நிகழ்வான 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் அரங்கேற்றப்பட்ட தமிழ் இன படுகொலையின் 33ஆவது ஆண்டு இன்று நினைவுகூறப்படுகிறது.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அருட்தந்தை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், அதன் பின்னரே தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்களின் நிலம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் கையகப்படுத்தும் செயற்றிட்டங்களையே நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.








