இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலை
ஸ்ரீலங்காவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவிலுள்ள உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் தலையீட்டை அடுத்து, இவர்களை விடுதலைசெய்வதற்கான உரிய பரிந்துரைகளை அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விடயம் தெரிவிக்கப்படவில்லை.
இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் நுழைந்து அத்தமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








