விடுதலைப்புலிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அமைச்சர்!
சித்தாண்டியில் நேற்று நடைபெற்ற அறுவடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“நான் முதலமைச்சராக இருந்த வேளையில் சுனாமி ஏற்பட்டது, அந்த காலத்தில் 50 லொறிகளில் நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு முதன் முதலாக மட்டக்களப்புக்கு 16 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வருகைத்தந்திருந்தேன்.
இதில், புல்லுமலை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை புலிகளிடம் பாரம் கொடுத்தனர்.
இதன்போது, கால்சப்பாத்துக்களையும் களட்டி வெறுமனே இருந்தார்கள், அப்போது கேட்டேன் எனக்கு என்ன பாதுகாப்பு என்று. நான் எனது பாரியருடன் வந்திருந்தமையினால் கொண்டுவந்த பொருட்களை வழங்கிவிட்டுத்தான் செல்லவேண்டுமென முடிவெடுத்தேன்.
கொண்டு வந்த பொருட்களை மக்களுக்கு கொடுத்துவிட்டு மீண்டும் வரும்போது இரவு வேளையாகிவிட்டது.
வரும்போது புல்லுமலை பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாதுகாப்பில் இருந்தார்கள். இன்னும் பலர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.
எனது பாரியார் உட்பட எனது எதிர்கட்சித் தலைவர்கள் வாகனத்தில் இருந்தார்கள், அப்போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் “வாகனத்தில் பயணம் செய்வது முதலமைச்சரா?” என கேட்டார்கள்” என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது வருகைத்தந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.








