Breaking News

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருணா அழைப்பு!



உறுகாமத்திட்டத்தின் கீழ் உள்ள சிறுபோக வேளாண்மைச் செய்கை அறுவடை விழா சித்தாண்டி வயல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கையில்,

குறித்த அறுவடை நிகழ்வுக்கு நீண்ட தூரம் இருந்து வருகை தந்திருக்கும் அமைச்சர் நீர்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சா மற்றும் பிரதி அமைச்சர், முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்திருக்கின்றார்கள்.

இவர்களைப் பாராட்டவேண்டும். ஆனால் இந்த நிகழ்வில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், குறித்த நிகழ்வுக்கு அழைத்தும் வரவில்லை.

உண்மையில் ஒருவராவது வந்திருக்கலாம், குறையாக கூறவில்லை, வந்திருந்தால் ஒரு அமைச்சை பயன்படுத்துவது சம்பந்தமாக உரையாடியிருக்கலாம். அவர்கள் வருகைத்தந்திருக்க வேண்டுமென்பது எனது அன்பான வேண்டுகோள் என முரளிதரன் உரையாற்றிக்கொண்டிருக்கும் வேளையில்,

தற்பொழுது எமது பாராளுமன்ற உறுப்பினர் வரவில்லை என்று கூறினேன், பாராளுமன்ற உறுப்பினர் அமல் வருகை தந்திருக்கின்றார், அவருக்கு பலத்த கரகோசமொன்று எழுப்பி அன்பாக வரவேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

நடைபெற்ற அறுவடை நிகழ்வானது காலை 9.30 ஆரம்பிக்கப்படுவதாக அழைக்கப்பட்ட போதும் அதிதிகளின் வருகை தாமதம் காரணமாக சுமார் 11.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகிய இருவரும் நிகழ்வின் நடுப்பகுதியில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் முரளிதரன், கிழக்கு விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.