கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடந்த இரண்டாம் திகதி இடம்பெற்ற நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தில் கிளிநொச்சியில் உள்ள இராணுவ வெற்றிச் சின்னங்கள் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கருத்து தெரிவிக்கும் போது ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம் இருப்பதாக பதிலளித்துள்ளார்.
ஒரு ஐம்பது வருடங்களுக்கு பின்னர் தென்பகுதியில் இருந்து வருகின்ற பெரும்பான்மை இனத்தவர்கள், சந்திரன் பூங்காவில் காணப்படும் சுவர்களை காட்டி இது எமது இனத்தவர் வாழ்ந்த இடங்கள் என உரிமை கோரும் அபாயம் உள்ளதுடன் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களை தினமும் பார்வையிடும் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அவர்களது கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவந்து எமது மக்கள் யுத்தத்தின் வலிகளை மறக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அத்தோடு வளர்ந்து வருகின்ற சிறுவர்கள் இச் சின்னம் ஏன் அமைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பும் போது யுத்தத்தின் வலிகள் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும். எனவே கிளிநொச்சியில் உள்ள அனைத்து இராணுவ வெற்றிச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








