கூட்டு எதிரணியின் ‘நிழல்’ அமைச்சரவை அடுத்த வாரம் கூடுகிறது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவை எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர், ரஞ்சித் சொய்சா இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசின் அமைச்சர்களை கண்காணிக்கும் நோக்கில் குறித்த நிழல் அமைச்சு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிழல் அமைச்சரவையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுப் பதிவிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், அதனை அவர் நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








