மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி - THAMILKINGDOM மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி - THAMILKINGDOM

 • Latest News

  மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி  மஹிந்தவின் கூட்டு எதிர்க்கட்சியினர் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக்க ட்சியினருடன் மேற்கொள்ளும் சூழச்சியை வெளிப்படுத்தப்போவதாக மேல்மாகாண முதல மைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

  எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் ஒன்றிணைந்து ஜனாதிபதி மைத்திரிபாலவின் கரங்களை பலப்படுத்தவேண்டும்.

  இதன்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலமான அரசாங்கம் ஒன்றை அமைக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

  ஆகஸ்ட் 17 பொதுத்தேர்தலின்போது, புதிய அணி ஒன்றை தேர்தலில் ஈடுபடுத்தியிருந்தால், விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் இவ்வாறான பாதயாத்திரையை மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  இந்தநிலையில் பாதயாத்திரையின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடைந்தால், மஹிந்த ராஜபக்சவுக்கு சந்தோசம் ஏற்படுமா என்றும் இசுரு தேவப்பிரிய கேள்வி எழுப்பினார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்த குடும்பத்தை பாதுகாக்க, ஐ.தே.கவுடன், கூட்டு எதிர்க்கட்சியினர் சூழ்ச்சி Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top