Breaking News

நைஸ் தாக்குதல் ஒரு தீவிரவாதத் தாக்குதல் : அவசர நிலையையும் பிரகடனம்



பிரான்ஸில் உள்ள நைஸ் நகரில் பாஸ்டிலி கொண்டாட்டத்தின் போது மர்ம நபர் ஒருவர் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த கூட்டத்திற்குள் னரக வண்டியை தாறுமாறாக ஓட்டி நடத்திய தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலாண்டே உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், 3 மாதங்களுக்கு அவசர நிலையையும் அவர் பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாரிஸ் நகரில் கடந்தாண்டு நவம்பர் 13ம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு அடுத்தபடியாக, அந்நாட்டில் நடத்தப்பட்ட மற்றொரு பாரிய தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது