தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி - THAMILKINGDOM தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி - THAMILKINGDOM
 • Latest News

  தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி  தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இணைத்தலைவர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் கூடவுள்ளது.

  வட கிழக்கு இணைந்த, சுயாட்சியடிப்படையிலான ஒரு சமஷ்டி முறைத்தீர்வு தமிழ்த்தலைமைகளால் உறுதியளித்தபடி 2016 ஆம் ஆண்டிற்குள் வருவதற்கான எந்த ஒரு அடிப்படையும் அற்ற ஒரு வெறுமை நிலையில், உள்ளக விசாரணையில் கூட சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்ற ஒரு கையறு நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட‌ வரைபு தமிழ் மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப்பெற்றுள்ள‌ நிலையிலும், சர்வதேச விசாரணை ஒன்று மிகவும் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்படும் என்ற எதிர்பார்பின் பிரகாரம் காட்சிகள் அரங்கேறிவரும் நிலையில், இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 7ஆம் திகதி Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top