Breaking News

மக்கள் வைத்த எதிர்பார்ப்பு ஒன்று, அரசாங்கம் செய்வது வேறு ஒன்று- பசில்



ஜெனீவா நகரில் நாட்டின் இறைமைக்கு தீங்கு பயக்கும் சட்ட திட்டங்கள் தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள சமூர்த்தி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலங்கை சமூர்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் மக்கள் வைத்த பெரும் எதிர்பார்ப்பு அரசியில் யாப்பு சீர்திருத்தமாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், பாராளுமன்ற தேர்தல் முறைமை மாற்றம் என்பன அதில் முக்கியமானவை.

அரசாங்கம் இந்த பாரிய எதிர்பார்ப்புக்களை எல்லாம் வைத்து விட்டு அரச சமயம், பாட்டு, கொடி என்பனவற்றையே சீர்திருத்தம் செய்ய முனைகின்றது. அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.