Breaking News

புதிய அரசியலமைப்பு இன ரீதியானது அல்ல- குழுத் தலைவர் லால் விஜேநாயக்க



புதிய அரசியலமைப்பில் தற்பொழுது பௌத்த மதத்துக்குள்ள அதே இடம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்து கணிப்பு குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு இன ரீதியானது எனக் கூறும் கருத்து பொய்யானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இன நல்லிணக்கம், அடிப்படை உரிமைகள் தொடர்பான அம்சங்களை சமூகமயப்படுத்தும் கருத்துக்கள் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார்