Breaking News

மீனவர் விவகாரம்! - ஜெயலலிதா மோடிக்கு அவசர கடிதம்



தமிழக மீனவர்கள் விடயத்தில் நிரந்தர தீர்வு காண்பதுடன், ஸ்ரீலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், கையகப்ப டுத்தப்பட்டுள்ள அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா கெடிதம் எழுதியுள்ளார்.

பாக்கு நீரிணையை அண்மித்து வாழும் இலட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் தான் தொடர்ச்சியாக கடிதம் மூலம் தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 7 ஆம் திகதி 3 படகுகளில் கடலுக்குச் சென்ற 16 மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, காங்கேசன்துறையில் தடுத்து வைத்துள்ளதாகவும் ஜெயலலிதா ஜெயராம் குறிப்பிட்டுள்ளார்.



கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தகுந்த விளக்கங்களுடன் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழகரசு வழக்கு தொடர்ந்துள்ளதுடன், அந்த வழக்கில் தமிழக அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.