Breaking News

பாதுகாப்பு வழங்கியும் வராது போனால் செய்ய எதுவுமில்லை- பொலிஸ் மா அதிபர்



யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக பொலிஸார் அறிவித்திருந்தும், அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திய பின்னரும் அவர்கள் பல்கலைக்கழகம் சமூகமளிக்காது போனால் பொலிஸாருக்கு செய்வதற்கு வேறு எதுவும் கிடையாது என பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சிங்கள தேசிய நாளிதழொன்று அவரிடம் வினவியபோதே பொலிஸ் மா அதிபர் இதனைக் கூறியுள்ளார்.