மீனவர் பிரச்சினை : முல்லைத்தீவில் உயர்மட்ட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இக் கூட்டத்தில், மீன்பிடி திணைக்கள உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதோடு, தீர்வுகளை எட்டுவதற்குரிய ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தென்னிலங்கை மீனவர்களால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.








