நாமல் பிணையில் விடுதலை
நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.