Breaking News

உசேன் போல்ட் தோல்வியடைவார் – பிரேசில் பிரபல சோதிடர் ஹேஷ்யம்



அனைவரினதும் அவதானத்தை ஈர்த்த ஜெமெய்க்காவின் குறுந்தூர ஓட்ட வீரர் உசேன் போல்ட் இம்முறை ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 100 மீட்டர் ஆரம்ப சுற்றில் வெற்றியீட்டியுள்ளார்.

இப்போட்டி நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இம்முறை ரியோ ஒலிம்பிக் போட்டியின் 100 மீற்றர் ஓட்டத்துக்கான தங்கப் பதக்கத்தினை உசேன் போல்ட் கைப்பற்ற மாட்டார் என பிரேசிலைச் சேர்ந்த பிரபல சோதிடர் ஒருவர் ஹேஷ்யம் தெரிவித்துள்ளார்.

இம்முறை 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தங்கப் பதக்கத்தை அமெரிக்காவின் குறுந்தூர ஓட்ட வீரர் ஜஸ்டின் கெட்லின் பெற்றுக் கொள்வார் என குறித்த சோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேஸிலைச் சேர்ந்த பிரபல சோதிடர் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான ஹேஷ்யங்கள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உசேன் போல்ட்டுக்கு இம்முறை காணப்படும் மிகப் பெரிய சவால் இந்த சோதிடரின் கருத்தை தோற்கடிப்பதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.