வட மாகாண தொண்டர் ஆசியரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
வட மாகாணத்தில் நிரந்தர நியமனங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட தொண்டர் ஆசியரியர்கள் இன்று காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் 1300 தொண்டர் ஆசிரியர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தமக்கான நிரந்ததர நியமனங்களை பெற்றுத்தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை நியமனங்கள் கிடைக்கவில்லை என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமக்கான நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.