மஹிந்தவுக்கு பாத யாத்திரை நான்காவது தோல்வி
கூட்டு எதிர்கட்யின் செயற்பாடுகளுக்கு மக்கள் ஏமாற தயார் இல்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
றம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான்காவது தடவையாகவும் தோல்வியடைந்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வெல்லமுடியும் என்று நினைத்து, தமது இரண்டாவது பதவிகாலம் நிறைவடையும் முன்னர் தேர்தலை நடத்தி, அதில் தோல்வியடைந்தார்.
பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற முடியும் என நினைத்தார் அதிலும் தோல்வியடைந்தார். அதுபோல் மே தின போராட்டங்களில் பலத்தை காட்டுவதாக கூறி தோல்வி கண்டார்.
இறுதியாக, தற்போது முன்னெடுக்கப்படும் பேரணியை நடத்தி அதிலும் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்தார்








