காணாமல் போனவர்களுக்காக மஹிந்தவைப் போல் குரல் கொடுத்தர் யாரும் இல்லை!
யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைனகளை முன்னெ டுப்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகாரை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவுள்ள நிரந்தர அலுவலகம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவுபெற்றதும் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒப்பந்த்தில் ஈடுபட்டது மஹிந்த ராஜபக்சவே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுத்தத்திற்கு பின்னரான பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பேன் கீ மூன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் புரிந்துணர்சு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம், காணாமற்போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படவுள்ள நிரந்தர அலுவலகம் மூலமாக இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கப்போவதாக மஹிந்த ராஜபக்ச முன்வைக்கும் குற்றச்சாட்டையும் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டுமென உண்மையை கண்டறியும் ஆணைக்குழு உள்ளிட்டன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு புறம்பான வகையில் இராணுவத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் எவரேனும் செயற்பட்டிருந்தால் அவ்வாறான படையதிகாரிகளை தண்டிப்பதும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதும் எந்த வகையிலும் துரோகச் செயலாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1990ஆம ஆண்டு காணாமல் போனவர்களின் தாய்மாரது கண்ணீருக்காக மஹிந்த ராஜபக்சவைப் போன்று வேறு எவரும் குரல் கொடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் ஜெனீவா மட்டுமன்றி உலகின் எந்தவொரு மூலைக்கும் சென்று நியாயம் கேட்க தாம் தயங்கப்போவது இல்லலை என மஹிந்த 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றியிருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரவித்துள்ளார்.