கூட்டு எதிர்க் கட்சி ஏன் தமது நிலைப்பாட்டைக் கூற அஞ்சுகிறது- மஹிந்த அமரவீர
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சிறப்பம்தான், அடிவாங்க வாங்க, வாங்க எழுந்திருப்பது எனவும், கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டுக்கு அழைத்துவர இருந்த ஆதரவாளர்கள் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு ஆதரவாளர்களை அழைத்து வரவுள்ளேன் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கூட்டு எதிர்க் கட்சியினர் தமது நிலைப்பாட்டை நேரடியாகவும் தெளிவாகவும் கூறியிருக்கலாம். நாம் கட்சியொன்றை உருவாக்கியிருக்கின்றோம். நாம் தனியாக போட்டியிடவுள்ளோம் எனவும் அவர்கள் மறைக்காமல் பகிரங்கமாக தெரிவித்திருக்கலாம். அதற்கு ஸ்ரீ ல.சு.கட்சி முகம்கொடுக்க தயாராகவுள்ளது எனவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் குறிப்பிட்டார்.