காபூலில் இரட்டை குண்டு வெடிப்பு: 24 பேர் பலி
உயிரிழந்தவர்களில், பல மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டு வெடிப்புகளில் 90-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
நகரின் மக்கள் நெரிசலான பகுதியில் விரைவாக அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது.
முதல் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவ மக்கள் விரைந்து கொண்டிருக்கும் போது, இரண்டாவது குண்டை ஒரு தற்கொலைப் படை தாக்குதல்தாரி வெடிக்கச் செய்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.