ஈழ அகதி முகாமில் தீக்குளித்த பெண் உயிரிழப்பு
தமிகழத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை ஈழ தமிழர் அகதி முகாமில் தீக்குளித்த மூன்று பிள்ளைகளின் தயார் உயிரிழந்துள்ளார்.
ஜெகதீஸ்வரன் என்ற ஈழ அகதியின் மனைவியான 26 வயதான துஷாத்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 8 ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த துஷாந்தினியிடம், அங்கு வந்த அவரது மைத்துனர் தவறாக நடத்துகொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்துனரிடம் இருந்து தப்பிக்கும் வகையில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி குறித்த பெண் தீக்குளித்தார்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில், சென்னை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துஷாந்தினி, நேற்று காலை 10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அதே முகாமில் வசிக்கும் துஷாந்தினியின் மைத்துனரான தயாபரன் என்ற 25 வயதான இளைஞரை வாலாஜாபேட்டை போலீசார் கைதுசெய்துள்ளனர்.