ஜனாதிபதி கூறியபோது தயாசிறி கண்ணீர் விட்டார்- இசுர தேவப்பிரிய
தன் மீது பல்வேறு பகுதிகளிலிருந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டு உரையில் தெரிவிக்கும் போது வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தன் மீது தாக்குதல் இடம்பெறுவதாக ஜனாதிபதி தனது உரையின் போது தெரிவித்த கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
சிலர் என்னை மறைமுகமாக தாக்குகிறார்கள், சிலர் நேரடியாக தாக்குகிறார்கள், சிலர் இரகசியமாக தாக்குகிறார்கள். நான் அவர்கள் அனைவரிடமும் கேற்கவிரும்புகிறேன். ஏன் என்னை தாக்குகிறீர்கள்? நான் ஒரு சிறிய மனிதன் என்பதால என ஜனாதிபதி தனது உரையின் போது கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.