Breaking News

அன்ஸார் மீதான தாக்குதல் நாட்டுக்கு ஏற்பட்ட ஒர் அபகீர்த்தி- மஹிந்த ராஜபக்ஷ



மலேசியாவில் இலங்கை உயர் ஸ்தானிகரின் தாக்குதல், இலங்கை அரசாங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் எனவும், அது எமது நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு அபகீர்த்தி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலி ஆதரவாளர்கள் நான் மலேசியாவுக்கு சென்ற சமயம் எனக்கு எதிராக முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களினால், அந்நாட்டு அரசாங்கம் எனக்குத் தேவையான பாதுகாப்பை செய்து தந்தது.

இந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தான் ஏற்பாடு செய்திருந்த சகல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதாகவும், ஒரு நிகழ்ச்சியில் மாத்திரமே கலந்துகொள்ள முடியாமல் போனதாகவும் மலேசிய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய போது மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.