Breaking News

எல்லோரையும் நீக்கும் போது நான் மட்டும் இருந்து பயனில்லை- மஹிந்த



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் இணைந்து புதிய அரசியல் கட்சியையோ அல்லது ஒரு கூட்டணியையோ அமைப்பது சாதாரணமான ஒன்று எனவும், அதில் எந்தவொரு தவறையும் தான் காணவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய அரசியல் சக்தியொன்றை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு, தற்போதைய ஜனாதிபதியையே இவர்கள் முன்னுதாரணமாக கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இவ்வாறு பலமுள்ள உறுப்பினர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் போது, தான் மாத்திரம் அக்கட்சியில் இருந்து பயனில்லையென்றே கருதவேண்டியுள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெறும் போது நான் மலேசியாவில் இருப்பேன் எனவும் அந்தக் கூட்டத்துக்கு வருமாறு எனக்கு அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.