மூக்குடைப்பட்ட வீரவன்ச அவமானத்தால் எடுத்துள்ள விபரீத முடிவு!
இலங்கையில் நல்லாட்சி நிறுவப்பட்டுள்ள நிலையில் பிளவுபட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தமது இருப்பை பலப்படுத்த பல்வேறு சேறுபூசும் நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் அமைச்சு பதவிகளை வகித்த பல சிரேஷ்ட உறுப்பினர்கள் தமக்கான இணைய ஊடகங்களை நிறுவி அதன்மூலம் சேறுபூசும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இனவாத கருத்துக்களை பரப்பி சிங்களவர்கள் மத்தியில் பிரபலம் பெற்ற நபராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளார்.
பௌத்தவாதம் பேசும் வீரவன்சவுக்கு மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பேரிடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
வீரவன்ச நேற்று முன்தினம் மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்திக்க சென்றிருந்தார். இதன்போது மஹாநாயக்க தேரரினால் விமல் வீரவன்சவுக்கு ஊடகத்திற்கு முன் கடுமையான அறிவுரை வழங்கி இருந்தார்.
இதனால் வீரவன்ச பெரிதும் அவமானப்பட்டதால் கடும் கோபம் அடைந்துள்ளார்.
இதனால் மஹாநாயக்க தேரரின் கதாபாத்திரத்தை இலக்கு வைத்து சேறு பூசும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு வீரவன்ச உத்தரவிட்டுள்ளார். அவரினால் நடத்தி செல்லப்படுகின்ற சேறு பூசும் குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெகு விரைவில் சேறு பூசும் குழு மற்றும் சிலரினால் இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மஹாநாயக்க தேரரை கடுமையாக விமரசிப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம் வயது தேரர் ஒருவரை பாலிய துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கம்பஹா பிரதேச பாடசாலை ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவரினால் சேறு பூசும் குழு இந்த நடவடிக்கையை செயற்படுத்துகின்றமை உறுதியாகியுள்ளது.