Breaking News

சார்க் உச்சி மாநாடு ரத்தாகுமா?



நான்கு நாடுகள் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதனால் நவம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 19 ஆவது சார்க் உச்சி மாநாடு ஒத்திவைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா, புட்டான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வரும் முறுகல் நிலை இதற்குக் காரணம் என தி ஹிந்து ஊடகம் தெரிவித்துள்ளது. நேபாளமும் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான இலங்கையின் தீர்மானம், இதுவரை வெளியிடப்படவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.