அரசியல் களத்தில் வீரவன்சவுடன் இணையும் டில்ஷான்!
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமல் வீரவன்சவின் தலைமையினால் தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து டில்ஷான் செயற்படவுள்ளார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் டில்ஷான் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டில்ஷான் போட்டியிடவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.
டில்ஷான் ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்று நடைபெறும் ரி-ருவென்டி போட்டியுடன் டில்ஷான் ஓய்வு பெறவுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச ரீதியான சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் டில்ஷான் ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.