Breaking News

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று



ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் பொரல்ல கெம்பல் மைதானத்தில் இன்று (10) காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

“புதிய நாட்டை நோக்கி செல்வதற்கு விரும்புபவர்கள் வாருங்கள்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

இம்மாநாட்டின் போது கட்சியின் கொள்கைக்கு உட்பட்ட பிரேரணைகள் பல நிறைவேற்றப்படவுள்ளன. ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட ஸ்ரீ ல.சு.க.யின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்சி வரலாற்றில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஐ.தே.கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.