வடக்கின் அபிவிருத்திக்கான தடைகளை நீக்குவேன் : ஜனாதிபதி வாக்குறுதி
‘வடக்கின் அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பேன்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இரணைமடுக்குளம் புனரமைப்புப் பணிகளில், சுற்றாடல் அதிகாரசபை, கனிய வளங்கள் திணைக்களங்கள் உள்ளிட்ட திணைக்களங்கள் தடைகளை ஏற்படுத்துத்துவதாகவும், இதனால் குளத்தை புனரமைப்புச் செய்ய முடியாதுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு ஜனாதிபதி ஜனாதிபதி, தனது உரையின் போது, அதற்கானப் பதிலை வழங்கியபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பதிலளித்த ஜனாதிபதி,
‘அபிவிருத்தி தடைகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன். அபிவிருத்திப் பணிகளுக்கு ஒருவரும் தடைகளை ஏற்படுத்தக்கூடாது. அதனால், வறுமையையும் ஏழ்மையும் தான் ஏற்படும்.
அனைவரும் போராட வேண்டும். அதற்காக துப்பாக்கி ஏந்திப் போராடுவது என்று அல்ல. அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்காக அனைவரும் அதனை நோக்கியதாக போராட வேண்டும். வடக்கில், மீன்பிடி, விவசாயம் முக்கிய தொழில்களாக காணப்படுகின்றன. அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைய நான் நன்கு உணர்வேன்’ என்றார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் 200ஆவது ஆண்டை நினைவுபடுத்தி நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை வெளியிட்டு வைத்தார்.
கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கான தர்மலிங்கம் சித்தார்த்தன். அங்கஜன் இராமநாதன், கே.என்.டகளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.