கொக்குவில் இந்துக் கல்லுாரி அதிபர் கைது
யாழ்ப்பாணத்தில் சில விசித்திர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உடுவில் மகளீர்கல்லுாரியில் மாணவிகளைத் தாக்கி ஆசிரியர்கள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கையில் கொக்குவில் இந்துக் கல்லுாரி அதிபர் தனது பாடசாலை மாணவன் தலை முடியை சரியாக வெட்டாத காரணத்தால் அடித்துள்ளார்.
இதனால் பொலிசார் அவரைக் கைது செய்து யாழ் நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தலைமுடியை ஒழுங்காக வெட்டாததன் காரணமாகவே அதிபர் அவனை தாக்கியதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் பாடசாலையின் அதிபர் பொலிசாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் பின்னர் முறைப்பாடு செய்த மாணவன் இம் முறைப்பாட்டை சமரசமாக தீர்க்க விரும்புவதாக தெரிவித்ததன் பின்னர் முறைப்பாடு இணக்கமாக்கி வைக்கப்பட்டது.