Breaking News

அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதன் நோக்கத்தை கூறுகிறார் செல்வம்



தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்வதன் நோக்கத்தை அந்த கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தாங்கள் சரணாகதி அரசியல் செய்யவில்லை என அடித்துக்கூறும் செல்வம் அடைக்கலநாதன் தற்போதைய அரசாங்கத்திற்கு தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்திய காரியாலயம் முல்லைத்தீவு விசுவமடுவில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டபோது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும் அந்த சந்தர்ப்பங்கள தான் எமக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வாய்ப்பாக அமையும்.

ஆகவே சந்தர்ப்பம் இன்றைக்கும் கொடுக்கப்படாத பட்சத்திலே எதிரிகளாக இருக்கலாம் அல்லது அரசாங்கமாக இருக்கலாம் சந்தர்ப்பத்தை எதிர்பாரத்தோம் அது அவர்களால் கொடுக்கப்படவில்லை அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது என தங்களை நியாப்படுத்தும் வகையில் அந்த செயற்பாடுகள் அவர்கள் பக்கம் இருக்க கூடாது என்பதற்காகதான் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம்.

ஆகவே எங்களுடைய மக்களுக்கு துரோகத்தனம் செய்யவில்லை. எங்களுக்கு உணர்வு இருக்கின்றது. எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்கின்ற வகையில் அவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக நாட்டில் சுவாசக்காற்றை உணரவேண்டும் என்ற ரீதியில் எமது செயற்பாடுகள் இருக்கும் என்பதை தெரிவிக்கின்றேன்.

நினைந்திருந்தால் கடந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் எமது இனத்தை விலைபேசி வசதியாக வாழ்ந்திருக்கலாம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அந்த நிலைக்கு என்றைக்கும் செல்லாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.